உலகக்கோப்பை கிரிக்கெட் - தென்னாபிரிக்காவின் துரதிட்டம்
இது வரை நடந்த உலகக்கோப்பை-2015 ஆட்டங்கள் அனைத்தையும் மிஞ்சும் வகையில், நேற்று நடந்த தென்னாபிரிக்கா-நியூஜிலாந்து அரை இறுதி ஆட்டம் அமைந்தது. இரு அணிகளும் அபாரமாக ஆடின. தெ.ஆ அணிக்கு அழுத்தமான சூழல்களில் சொதப்புபவர்கள் (Chokers) என்ற பட்டம் பல காலமாக இருந்து வருவது தெரிந்தது தான். ஆனால், அவர்கள் முதலில் பேட் செய்தபோது மன உறுதியுடன் நம்பிக்கையாக விளையாடினர் என்று கூறுவேன். 10 ஓவர்களுக்குள் 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், டுபிளஸ்ஸியும், ரசௌவும் நிதானமாகவே ஆடினர். 100 ஓட்டங்களை எட்ட 24.1 ஓவர்கள் ஆயின. ஆதாம் மில்னேக்கு ஏற்பட்ட காயத்தால் அவருக்கு பதிலாக பந்து வீசிய இளைஞர் மாட் ஹென்றி அற்புதமாக பந்து வீசி தனது முதல் 5 ஓவர்களில் 9 ரன்களே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
டிவிலியர்ஸ் களமிறங்கிய பின் தெ.ஆ அவசர/அதிரடி கதிக்கு மாறியது. வில்லியம்சன் 23வது ஓவரில் ஒரு ரன் அவுட்டையும், அடுத்த ஓவரில் ஒரு காட்ச்சையும் சொதப்பியதில், டிவிலியர்ஸ் 2 முறை தப்பிப் பிழைத்தார். தெ,ஆ 38 ஓவர்களில் 216/3 (டிவிலியர்ஸ் 60, டுபிளஸ்ஸி 82) என்ற மிக வலுவான நிலையில் இருந்தபோது, 1992-லும், 2003-லும் சதி செய்த மழை மீண்டும் தன் வேலையைக் காட்டியதில், ஆட்டம், 43 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. இருந்தும் மிச்சமிருந்த அந்த 5 ஓவர்களில், மில்லரின் மகா அதிரடியில் (49 ரன்கள், 18 பந்துகளில்) தெ.ஆ 65 ஓட்டங்கள் எடுத்தது. டக்வொர்த்-லூயி கணக்குப்படி, நியூஜியின் இலக்கு 43 ஓவர்களில் 298 (பிரதி ஓவருக்கு கிட்டத்தட்ட 7 ரன்கள்) என்று நிர்ணயிக்கப்பட்டு, ஒரு அருமையான “துரத்தலுக்கு” அடித்தளம் அமைக்கப்பட்டது.
நியூஜி பேட்டிங்: மெக்கல்லம் ஆட்டம் இலக்கு பொறுத்து அமையும் ஒன்றல்ல. இலக்கு 100,200.300 என்று எதுவாக இருந்தாலும், ஐபில் டி20 என்றாலும் உலகக்கோப்பை ஒரு நாள் ஆட்டம் என்றாலும், அதிரடி தான் அவர் பாணி. ரஜினி ஸ்டைலில் சொல்வதானால், மெக்கல்லம் வழி தனிவழி :-) 5 ஓவர்களில் நியூஜி 71 ஓட்டங்களை குவித்தது. அதில் மெக்கல்லம் எடுத்தது 59 (26 பந்துகள்). உலகத்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினை ஒரு கிளப் பந்து வீச்சாளர் போல மெக்கல்லம் குரூரமாக எதிர்கொண்டதில் , 5வது ஓவரில் மட்டும் 25 ஓட்டங்கள்!
என் டிவிட்டு ஒன்று:
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 9h 9 hours ago
Thats what you call stand and deliver. .... Brendon's sixer against the 1 and only Steyn #NZvsSA
அந்நாள் முக்குச்சிக்காரனும், இந்நாள் தாக்கடி மட்டையாளுமான மெக்கல்லம் வெறி கொண்ட வேங்கையாக இருந்த காலையில் (சரி மாலையில்), வெளிவிலகுச்சுழல் வீசும் தென்னாப்பிரிக்கா பந்தாள் இம்ரான் தஹீர் 6வது வீச்சலகை ஒரு வெற்றலகாக வீசியது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும் (இந்த வரி மட்டும் கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய https://www.facebook.com/photo.php?fbid=863785130326644&set=a.278177815554048.60630.100000854949412&type=1 கட்டுரை தந்த உத்வேகத்தில் எழுதப்பட்டது)
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 9h 9 hours ago
Now SA can make a match of this contest as Mccullum has departed. Styne should be 1 relieved man #NZvsSA #worldcupcricket
மெக்கல்லம் 6வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் தான், ஆட்டம் ஒரு சமநிலைக்கு வந்தது என்று கூறலாம். அவர் இன்னும் ஒரு 10 ஓவர்கள் களத்தில் இருந்திருந்தால், இந்த ஆட்டத்தை ”நகம் கடிக்க” வைத்த ஒன்றாக நாம் எல்லாம் சோசியல் மீடியாவில் சிலாகித்திருக்க மாட்டோம் என்று உறுதியாக கூறுவேன். வில்லியம்ஸும், குப்தில்லும், சோபிக்கவில்லை. டெய்லரும், எலியட்டும் கவனமாக, சற்று நிதானமாக ஆடினாலும், முதல் 5-ஓவர் மெக்கல்ல அதிரடியால், 22 ஓவர்கள் வரை (டெய்லர் விக்கெட்டிழப்பு) தேவையான ரன்ரேட் 7-ஐத் தாண்டவில்லை. நியூஜி 151/4. முக்கியமான தருணங்களில் தாக்குதலில் இறங்காமல், மெத்தனமாக, ஒரு சுகம் தரும் வட்டத்தில் (comfort zone) தென்னாபிரிக்கா இயங்குவது கூட அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனலாம். One must attack when the opponent seems to be a bit down.
நீயூஜி பாதிக்கிணறு தாண்டிய நிலையில் ஆண்டர்சன் களமிறங்கினார். இந்த இடத்தில், ஆண்டர்சனையும், எலியட்டையும் பாராட்ட வேண்டும், அழுத்தம் எதுவும் காட்டாமல், அமைதியாக ஓட்டங்களை எடுத்தனர். 32வது ஓவரில், தெ,ஆ-வின் தலைசிறந்த ஃபீல்டர் டிவிலியர்ஸ் ஒரு எளிமையான ரன் அவுட் வாய்ப்பை நழுவ விட்டார். நம்பவே முடியாத தருணம் அது. அது அழுத்ததினால் நிகழ்ந்ததாகத் தான் அப்போது தோன்றியது.
என் டிவிட்டுகள்:
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU
The very Devil took over DeVilliers in that moment of choking madness. He had time to pull a stump out after the crucial miss #NZvSA
anbudan BALA|எஅ.பாலா retweeted
prempanicker @prempanicker
The batsman wasn’t in the frame, AB!! You could have gathered, bounced the ball a couple of times and still had time!!
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU
.@ksnagarajan Choking just seen in brilliant DeVilliers missing the simplest of runouts #NZvSA #worldcupcricket
32வது ஓவர் முடிவில் ரன்ரேட் 8-ஐத் தாண்டினாலும், 6 விக்கெட்டுகள் கையிருப்பில் (11 ஓவர்களில் 90 ரன்கள் தேவை), நியூஜி கை சற்றே ஓங்கி இருந்ததாகத் தான் தோன்றியது. நடுவில் டிவிலியர்ஸ் ஒரு 8 ரன் ஓவர் வீசினார். மார்க்கல் வீசிய 38வது ஓவர் ஒரு மிக அற்புதமான ஓவர். ஒரு ரன் தான் கொடுத்தார். ஆண்டர்சன் விக்கெட்டை வீழ்த்தினார். மிக அதிக உயரம் சென்ற பந்து விழும் இடத்தை அருமையாக மதிப்பிட்டு காட்ச் பிடித்த டிபிளஸ்ஸியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓவர் முடிவில், ரன்ரேட் முதல் முறையாக 9-ஐத் தாண்டியது.
என் டிவீட்டுகள்:
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 6h 6 hours ago
60:40 in SA favour now #NZvSA
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 6h 6 hours ago
29 from 18. When most #ipl teams can win from here, why cant the Black Caps :-) #NZvSA
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 6h 6 hours ago
I am not supporting anyone here. Destiny will take its course in thrillers. Ony upto a point effort works. #NZvSA #worldcupcricket
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 6h 6 hours ago
This is LIVE WIRE #NZvSA
41வது ஓவரில், ரோன்ச்சி அவுட். தனது 5 உலகக்கோப்பையில் பங்கு கொள்ளும் 36-வயது டேனியல் வெட்டோரி களமிறங்கினார். மீண்டும் ஒரு ரன் அவுட் சொதப்பல், எலியட்டுக்கு ”உயிர்” கிடைத்தது. ஓவர் முடிவில், தேவையான ரன்ரேட் 11.50. 42வது மார்க்கல் ஓவரில், பெஹர்தீனும், டூமினியும் மோதிக்கொண்டதில் காட்ச் வாய்ப்பு பறிபோய் எலியட்டுக்கு மீண்டும் ஒரு “உயிர்” கிடைத்தது! இவற்றை வைத்து, தென்னாபிரிக்க அணியை Chokers என்றழைப்பது சற்றே அதீதம் என்பேன். துரதிட்டமிக்க ஒரு அணியாகத் தான் தென்னாபிரிக்காவை நான் பார்க்கிறேன். இறுதி ஸ்டெயின் (43வது) ஓவரில் 12 ரன்கள் தேவையான சூழலில், 5வது பந்தில் எலியட் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து, மீதம் வரலாறு ஆனது. 2015 உலகக்கோப்பை போட்டியின் சிறந்த அணியாக பலரும் கருதும் நியூஜிலாந்து முதன்முறையாக உலகக்கோப்பை ஒரு நாள் போட்டி இறுதிச்சுற்றில் நுழைந்தது.
நியூஜியின் மகத்தான வெற்றிக்குப் பின் நான் இட்ட சில டிவீட்டுகள்:
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 6h 6 hours ago
One feels so sorry for SA. Such a talented bunch of cricketers, tend to falter near the last mile #NZvSA
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 6h 6 hours ago
NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ #NZvSA
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 6h 6 hours ago
.@priyakathiravan Steyn for all his proven skills & greatness delivered much less in crunch situations. He doesn't inspire confidence #facts
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 6h 6 hours ago
Though I acted neutral today, I was secretly wishing for a famous SA win as in some ways SA cricket reflects my life #NZvSA #worldcupcricket
anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU · 5h 5 hours ago
When Morne was shedding tears, I really felt depressed. #NZvSA That lanky kid bowled his heart out today and that was not enough
முகத்தில் வலியைத் தேக்கிய டிவிலியர்ஸின் இப்புகைப்படம், தென்னாபிரிக்காவினரின் சோகத்தின் வெளிப்பாடாகவும்,
ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் இந்த டிவிட்டர் குறிப்பு, நியூஜிலாந்து நாட்டினரின் பெருமகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் காண முடிகிறது.
Stephen Fleming, the Back Caps' former captain, was ecstatic.
“What an unbelievable game. So proud of the Back Caps and what they have achieved. Also feel the raw pain of South Africa on an amazing day,” read his post on the social networking site.
இறுதியாக ஒரு விஷயம்: நாளை நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அரைஇறுதியில் இந்தியா டாஸில் வென்றால், சிட்னி ஆடுகளத்தை நோக்குகையில், ஃபீல்டிங் செய்வது உத்தமம் என்று படுகிறது. ஏனெனில், முதலில் ஆடி, 300+ ரன்கள் அடித்தால் கூட அது போதுமா என்று தெரியவில்லை.
---எ.அ.பாலா